செக்ஸ் லீலையில் சிக்கிய நித்தியானந்தாவின் உதவியாளர் கைது

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான வீடியோ வெளியாகி நித்தியானந்தாவை பெரும் சிக்கலில் ஆழ்த்தியது. அவர் பெங்களூரை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் அவரை இமாச்சல பிரதேசத்தில் வைத்து கர்நாடக போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும் நடிகை ரஞ்சிதா மட்டும் இதுவரே சிக்கவே இல்லை. அவரை போலீஸார் தேடிக் கொண்டே இருக்கின்றனர். நித்தியானந்தா மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்த நிலையில் நித்தியானந்தா வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக கூறி நித்தியானந்தாவின் உதவியாளரான சச்சிதானந்தாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக சிஐடி போலீஸார் கூறுகையில், ஆதாரங்களை அழித்தது தொடர்பாகவும், கிரிமினல் சதித் திட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் சச்சிதானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம் என்று சிஐடி தெரிவித்துள்ளது.
பெங்களூர் பிடாதி ஆசிரமத்தில் முக்கியப் புள்ள இந்த சச்சிதானந்தா. நித்தியானந்தாவிடம் சிஷ்யர்களாக சேர்ந்தவர்களிடம் கட்டாயப்படுத்தி சில உறுதிமொழிகளை எழுதி வாங்கினார் நித்தியானந்தா என்பது ஒரு புகார். அந்தப் புகாருக்கு ஆதாரமாக விளங்கிய அந்த உறுதிமொழிப் பத்திரங்களை சச்சிதானந்தா அழித்துள்ளதாகவே தற்போது அவர் கைதாகியுள்ளார்.
நித்தியானந்தா, ரஞ்சிதா விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது இந்த சச்சிதானந்தாதான் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சச்சிதானந்தா. 2003ம் ஆண்டு சிகாகோவில் வைத்து நித்தியானந்தாவை சந்தித்து அவருடன் இணைந்து கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications