ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம்-எதிர்க்கட்சிகள்

இன்று பக்ரீத் என்பதால் நாடாளுமன்றம் இயங்கவில்லை. குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல் ஒரு நாள் கூட அலுவல் முறையாக நடக்கவில்லை. கூட்டத்தை அமைதியாக நடத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நேரடியாக பிரதமரை கண்டித்து விட்டது சுப்ரீம் கோர்ட். இத்தனை காலமாக ஏன் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலவற்றவராக பிரதமர் இருந்தார் என்றும் அது கேட்டுள்ளது.
இது தற்போது எதிர்க்கட்சிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. இதை முன்வைத்து ஜேபிசி விசாரணை தேவை என்ற குரலை பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன எதிர்க்கட்சிகள்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் உள்ளன. அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை (ஜேபிசி தேவை என்பதை) ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதை அரசு செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை விட மாட்டோம்.
அரசு இதை உணர்ந்து, நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்காமல் ஜேபிசி விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றார்.
ராஜ்யசபா அதிமுக தலைவர் டாக்டர் மைத்ரேயன், சிவசேனா தலைவர் சஞ்சய் ராத் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.
மைத்ரேயன் கூறுகையில், இதுதொடர்பாக பிரதமர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை பிரதமர் பதில் அளிக்கத் தவறினால் லோக்சபாவையும், ராஜ்யசபாவையும் முடக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications