ஆந்திராவில் சாலை விபத்து-வாணியம்பாடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி
வாணியம்பாடி: ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் வாணியம்பாடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாட்டம் வாணியாம்பாடி தயாமின் தெருவை சேர்ந்தவர் ஆசிப் அகமத் (44), இவரது மனைவி ஷாகிரா (35), இவர்களுடைய மகள்கள் அபியா (14), இக்பா (12), அசின் (4) மற்றும் உறவினருடைய அண்ணன் மகன் நசீம் (22), ஆகியோர் பக்ரீத் பண்டிகைக்காக ஆந்திர மாநிலம் ராய்சுட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
கார் பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக தவறான பாதையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஒன்று வேகமாக வந்தது.
எதிர்புறம் வருவதற்குப் பதில் தங்களது காரை நோக்கி கண்டெய்னர் லாரி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிப் அகமத், காரை நிறுத்த முயற்சி செய்தார்.
ஆனால் கார் மீது லாரி பயங்கர சத்தத்துடன் மோதி விட்டது. இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வேகமாக ஓடி வந்தனர்.
விபத்தில் ஆசிப் அகமத், ஷாகீரா, அசின் மற்றும் இக்பா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நசீம், காயம் அடைந்த அபிநயா ஆகியோரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே நசீம் உயிரிழந்தார்.
அபியா சிறு காயங்களுடன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தவறான பாதையில் வந்து பெரும் விபத்துக்குக் காரணமான பொதுமக்கள் வேகமாக ஓடி வந்தனர். அதற்குள்ளாக கண்டெய்னர் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications