விரைவில் திருமணம் செய்வேன்-ராகுல் காந்தி

ஸ்பெயின் நாட்டு பெண் வெரோனிகாவை காதலித்து வந்தார் ராகுல். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று அப்போது பேச்சு அடிபட்டது.
ஆனால் அடுத்த பிரதமர் என்று கூறப்படும் ராகுல், வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அவரது தாயார் சந்திக்கும் பிரச்சினைகள், அவருக்கும் வரலாம் என்று கூறப்பட்டது. இதனை ஒரு விவகாரமாக்கவும் பாஜக போன்ற கட்சிகள் திட்டமிட்டன.
இதனால் வெரோனிகா விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது. திருமணம் பற்றி மட்டும் பேசாமல் இருந்தார் ராகுல்.
இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் செய்தபோது தொண்டர் கேட்ட கேள்விக்கு நான் விரைவில் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
அமேதி இளவரசர் (ராகுல்காந்தி) எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று அவரிடம் தொண்டர் ஒருவர் கேட்க, சிரித்துக்கொண்டே "விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்" என்று கூறினார். ஆனால் பெண் யார் என்று கூறவில்லை.












Click it and Unblock the Notifications