மே மாதம் தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும்: வைகோ
திருப்பூர்: வரும் மே மாதத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருப்பூரில் நடந்த திருமண விழாவில் பேசிய அவர், தமிழக மக்கள் உயிர் பயத்தில் இருக்கின்றனர். காரணம், தொடரும் குழந்தைகள் கடத்தல். பள்ளி சென்ற குழந்தை வீடு திரும்பி வருமா, பணிக்கு சென்ற கணவர் இரவுக்குள் வீட்டுக்கு வந்து விடுவாரா, கடைக்கு சென்ற மனைவி திரும்புவாளா என்ற பயம். மக்கள் அச்சம் கலந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஈழத் தமிழனத்தை அழித்த பெருமை இந்திய சர்வாதிகார நிர்வாகத்துக்கே சேரும்.
தொழிலாளர் ஒற்றுமையால் நெய்வேலி, ஸ்டெர்லைட் ஆலை நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டோம். நூல் விலையை குறைப்போம், பஞ்சு ஏற்றுமதியை தடுப்போம் என்று மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
அதிமுகவுடன் நிலையான, வலுசேர்க்கும் கூட்டணியாக மதிமுக இருக்கும். அடுத்த ஆண்டு மே மாதம், தமிழகம் ஒரு பெரிய மாற்றத்தை காணப் போகிறது. அதன் பிறகு தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என்றார்.
காங்கிரஸ் கூட்டணிக்கு அதிமுக முயல்வது குறித்தோ, காங்கிரசுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தது குறித்தோ வைகோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications