இந்தியாவில் வெர்சாக் செல்போன் அறிமுகம்: விலை 4.25 லட்சம் தான்!

இதற்கான டீலர்ஷிப்பை டெல்லியைச் சேர்ந்த புளூஸ் கிலாதிங் கம்பெனி (பிசிசி) பெற்றுள்ளது. மெட்ரோ நகரங்களில் உள்ள வெர்சாக் பொடிக் மற்றும் வெர்சாக் கலெக்ஷன் கடைகளில் இந்த போன் கிடைக்கும்.
இந்தியாவில் வெர்சாக் செல்போன் விற்பனை நன்றாக நடக்கும் என்று நம்புகிறோம். மேலும், இது போன்ற பிரீமியம் தயாரிப்புகளுக்கு இங்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று பிசிசியின் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அபய் குப்தா தெரிவித்தார்.
இரண்டு வகை வெர்சாக் யுனிக் செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் விலை ரூ. 3,95,000 மற்றும் ரூ. 4,25,000 என்று அவர் மேலும் தெரிவித்தார்.
3ஜி வசதி, 18 சவரன் தங்கத்திலான செராமிக் பிரேம், 5 மெகாபிக்சல் கேமரா உள்ளிட்டவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.
வெர்சாக் யுனிக் போனை தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த போன் இந்த ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிசிசி நிறைய சொகுசு பிராண்ட்களின் டீலராக உள்ளது. அவை வெர்சாக் கலெக்ஷன், காரினிலியானி, கேடினி, விஜேசி, ஜியானி வெர்சாசி ஆகும்.
சொகுசு பிராண்ட்களையும், தயாரிப்புகளையும் இந்தியா தன் பக்கம் வெகுவாக ஈர்த்து வருகிறது. அன்மையில் வோல்க்ஸ்வேகன் குரூப் கம்பெனியின் புகாடி ஆட்டோமொபைல்ஸ் உலகின் காஸ்ட்லி காரான பூகாடி வேரானை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 16 கோடி.
ஸ்விஸ் வாட்ச் தயாரிப்பாளரான ஆடர்மார்ஸ் பியூஜியட் தனது புதிய கலெக்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதில் 1 வாட்சின் விலை ரூ. 2.1 கோடி வரை உள்ளது.
வரும் 2015-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் சொகுசு பொருட்கள் சந்தை 14.7 பில்லியன் டாலரைத் தொடும் என்று சிஐஐ- ஏ.டி. கியர்னி அறிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications