ரஜினி காரை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய ரசிகர் பலி!
மதுரை: மதுரைக்கு வந்த ரஜினியின் காரைப் பின்தொடர்ந்து சென்ற ரசிகர்களில் ஒருவர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி- அனுஷா திருமணம் நேற்று மதுரையில் நடந்தது.
இத்திருமணத்திற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த ரஜினிகாந்த், பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு காரில் தமுக்கம் மைதானத்துக்குப் புறப்பட்டார் ரஜினி. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி வந்திருந்ததால், அவருக்கு ஏராளமான மதுரை ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ரஜினி காரில் ஏறி தமுக்கம் மைதானம் சென்றார். அவரது ரசிகர்களும் வாகனங்களில் ரஜினி காரை பின் தொடர்ந்தனர்.
சுமோ ஒன்றில் இடம் போதாமல் ரசிகர்கள் தொங்கிக்கொண்டு வந்தனர். கார் பழங்காநத்தம் சிக்னல் வந்தபோது எதிரே வேகமாக வந்த டூவீலருக்கு வழி கொடுக்க சட்டென சுமேவைத் திருப்பியதில், காரில் தொங்கிக்கொண்டிருந்த ரசிகர்கள் கீழே விழுந்தனர்.
இதில் கார்த்திகேயன்(33), அப்பாஸ் மந்திரி(29), அழகு பாண்டியன்(30) ஆகியோருக்கு பலத்த அடிபட்டது. உடனே இவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கார்த்திகேயன் மண்டையில் பலமாக அடிபட்டதால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் மதுரை பந்தடி 8வது தெருவைச் சேர்ந்தவர்.
மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications