பிகாரில் நாளை இறுதிக் கட்ட தேர்தல்-24ல் ஓட்டு எண்ணிக்கை
பாட்னா: பிகார் சட்டசபைக்கு நாளை இறுதிக் கட்ட தேர்தல் நடக்கிறது.
இங்கு சட்டசபைத் தேர்தல் ஆறு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 26 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்-பாஸ்வானின் லோக் ஜன் சக்தி ஆகியவை இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.
தேவியும் பிரச்சாரம் செய்தனர்.
தேர்தல் நடக்கும் 26 தொகுதிகளில் 18 தொகுதிகள் நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையே ஓட்டுப் பதிவு நடக்கும். மற்ற பகுதிகளில் 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடக்கும்.
வரும் 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று முற்பகலியே அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும்.
முடிவை தீர்மானிப்பது பெண்களே:
இதுவரை நடந்த 5 கட்டத் தேர்தல்களிலும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர். ஆண்கள் 50.70 சதவீதமும், பெண்கள் 54.85 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.
கடந்த தேர்தலின் போது 47 சதவீத பெண்களே வாக்களித்திருந்தனர். இம் முறை அது 11 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் நிதிஷ்குமார் பெண்களுக்கான நலத் திட்டங்களிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பது ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications