தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு இருவர் பலி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பெய்த கனமழையால் தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தின் பல இடங்களில் மழைக்கு வீடுகள் இடிந்துள்ளன. இது வரை 7 வீடுகள் முழு்மையாகவும், 2 வீடுகள் பகுதியளவும் இடிந்துள்ளன.
மேலும் மழையின் போது மின்னல் தாக்கயதில் 3 கால்நடைகள் பலியாகின. திருச்செந்தூர் அருகேயுள்ள வெள்ளமடத்தைச் சேர்ந்த சித்திரை கனி, காட்டு முகமதுபள்ளியைச் சேர்ந்த சுப்புராஜ் ஆகிய இருவர் இடி தாக்கியதில் பலியாகினர். மழை சேதம் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளங்கள், ஏரிகளில் நீர் நிரம்பத் துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications