சோனியா, காங்கிரஸை கடுமையாக விமர்சித்த ஜெகன்மோகன் டிவி

சமீபத்தில்தான் எனது பொறுமை எல்லையைத் தாண்டி வருகிறது என்று கூறியிருந்தார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்த நிலையில் அவருக்குச் சொந்தமான சாக்ஷி டிவி சோனியாவை நேரடியாக விமர்சித்து செய்தி வெளியிட்டதால் காங்கிரஸார் கொதிப்படைந்துள்ளனர்.
இவர்கள் தவிர பிரதமர் மன்மோகன் சிங்கையும் அந்த டிவி செய்தி விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது என்றும் அந்த செய்தி வர்ணித்துள்ளது.
நேற்று இரவு ஒளிபரப்பான ஒரு மணி நேர ஆய்வு செய்தியின்போதுதான் இந்த களேபரங்கள் நடந்தன.
சாக்ஷி டிவி சோனியாவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பதை எதிர்த்து காங்கிரஸார் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாக்ஷி டிவி அலுவலகம் முன்பு கூடி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் புதிய சர்ச்சையால் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
சாக்ஷி டிவியின் செய்தி அபத்தமானது, அவதூறானது என்று முதல்வர் ரோசய்யாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications