பீகாரில் குண்டுவெடிப்பு-5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
பாட்னா: சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மறு நாளே பீகார் மாநிலத்தில் பலத்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
பீகாரின், ஒளரங்காபாத் மாவட்டம், பச்சோக்கர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளே இதற்குக் காரணம்.
உண்மையில், இந்த குண்டை நேற்று மாலையே பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து மீட்டிருந்தனர். நேற்று நடந்த இறுதி வாக்குப்பதிவின்போது நாசத்தை ஏற்படுத்த இந்தக் குண்டை மாவோயிஸ்டுகள் வைத்திருந்தனர். இதை போலீஸார் கண்டுபிடித்து மீட்டுவிட்டனர். ஆனால் இதை செயலிழக்க வைக்காமல் அப்படியே அங்கிருந்த வயலில் போட்டு வைத்திருந்தனர்.
இன்று காலை அதை செயலிழக்க வைக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன்று காலை வயலுக்குச் சென்ற விவசாயிகள் குண்டு கிடந்தைப் பார்த்து அருகில் போனபோது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி பி.கே.தாக்கூர் கூறுகையில், சம்பவ இடத்தில் குண்டு இருப்பது குறித்து கிராம மக்களை நாங்கள் உஷார்படுத்தியிருந்தோம். ஆனால் அங்கு இன்று காலை சில குழந்தைகள் சென்று குண்டை எடுத்து விளையாடியுள்ளனர். இதனால்தான் அது வெடித்து விட்டது என்றார்.
ஒரு வெடிகுண்டை கண்டுபிடித்தவுடன் அதை செயலிழக்க வைப்பதுதான் பாதுகாப்புப் படையினரின் முதல் வேலையாக இருக்கும். ஆனால் குண்டைக் கண்டுபிடித்து அதை சாவகாசமாக வயலில் போட்டு வைத்து விட்டுச் சென்ற பாதுகாப்புப் படையினரின் செயல் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications