கோவையில் இருந்து சென்னை, டெல்லிக்கு இன்டிகோ விமான சேவை

சர்வதேச விமான நிறுவனங்கள் சார்பாக, விமானப் போக்குவரத்து சேவைகளில் 19 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றது இன்டர்க்ளோப் என்டர்பிரைசஸ் நிறுவனம்.
இதனையடுத்து, தற்போது இந்த நிறுவனம் கோவையில் இருந்து சென்னை, டில்லிக்கு விமான சேவையை வரும் 30 ம் தேதியில் இருந்து துவக்குகிறது.
கோவையில் இருந்து சென்னைக்கு, ரூ 1,863 கட்டணத்தில், தினமும் மாலை 4.50 மணிக்கும், வியாழன் அன்று மட்டும் 5.40 மணிக்கும் இந்த விமானம் புறப்படும்.
கோவையில் இருந்து டில்லிக்கு, ரூ 3,324 கட்டணம். தினமும் காலை 11.20 மணிக்கும், சென்னை வழியாக தினமும் மாலை 4.50 மணிக்கும், வியாழன் அன்று மட்டும் மாலை 5.40 மணிக்கும் இந்த விமானம் புறப்படும்.
சென்னையில் இருந்து தினமும் இரவு 10.00 மணிக்கு கோவைக்கு விமானம் புறப்படும். அதே போன்று, டில்லியில் இருந்து சென்னை வழியாக தினமும் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படுகின்றது.
மேலும், சென்னை வழித்தடம் இன்றி தினமும் பகல் 1.20 மணிக்கும், வியாழக்கிழமை அன்று பகல் 2.10 மணிக்கும் விமான சேவை உள்ளது.
இந்த நிறுவனம், அகர்தலா, அகமதாபாத், பெங்களூரு, புவனேஷ்வர், சென்னை, டில்லி, கோவா, குவஹாத்தி, திப்ருகர், ஹைதராபாத், இம்பால், ஜெய்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, புனே, ஸ்ரீநகர் உள்ளிட்ட 23 நகரங்களில் விமான சேவையை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications