மக்களிடம் சென்று குறைகளைக் கேளுங்கள்-தொண்டர்களுக்கு விஜயகாந்த் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்களிடம் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய உதவுங்கள் என்று தேமுதிகவினருக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக சேலத்தில் மாநில மாநாட்டை நடத்தப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மு்நனதாக கட்சியின் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் கூட்டமும் நடந்தது.
இக்கூட்டத்தில் தேர்தல் குறித்தும், சேலம் மாநாடு குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசித்தார்.
அப்போது விஜயகாந்த் கட்சியினரிடம் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும் பொது மக்களை சந்தித்து பேசி அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்.












Click it and Unblock the Notifications