நாட்டின் 3வது மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்தது கோல் இந்தியா

Subscribe to Oneindia Tamil

Coal India Limited
இந்தியாவின் 3வது மதிப்புமிக்க நிறுவனமாக மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனம் உருவெடுத்துள்ளது.

முதல் இடத்தில் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனமும், 2வது இடத்தில் ஓஎன்ஜிசியும் உள்ளன. 3வது இடத்தில் டிசிஎஸ் நிறுவனம் இருந்து வந்தது. இதை தற்போது கோல் இந்தியா பிடித்துள்ளது.

கோல் இந்தியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,09,671.57 கோடியாகும்.

முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 3,26,207 கோடியாகும்.

இருப்பினும், முதல் பத்து இடங்களில் உள்ள 8 நிறுவனங்கள் கடந்த வாரத்தில், ரூ. 57,044.09 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 2வது இடத்தில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ. 8865.61 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,70,641.92 கோடியாகும்.

டிசிஎஸ் நிறுவனம் ரூ. 1,99,272.32 கோடி சந்தை மதிப்பையும், இன்போசிஸ் ரூ. 1,70,286 கோடி மதிப்பையும் கொண்டுள்ளன.

டாப் 10 வரிசையில் தனியார் நிறுவனமான பார்தி ஏர்டெல்லும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலிலிருந்து லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் வெளியேறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+