இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உருவெடுத்தது யுஏஇ
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2010ம் ஆண்டின் முதல் பாதி ஆண்டின் வர்த்தகப் பரிவர்த்தனை விவரங்களின்படி இது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டின் முதல் பாதியில், எமிரேட்ஸுடன்தான் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்துள்ளது இந்தியா. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரும் வர்த்தகப் பங்காளியாக எமிரேட்ஸ் உருவெடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணை அல்லாத வர்த்தகப் பரிவர்த்தனையின் அளவு நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 57 சதவீதமாக அதிகரித்து 20.4 பில்லியன்டாலராக இருந்தது.
மேலும் இந்தியாவுக்கான எண்ணை அல்லாத ஏற்றுமதியின் அளவு 75 சதவீதம் அதிகரித்து, முதல் பாதியில் 4 பில்லியன் டாலராக இருந்தது.
2010ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனை 32.7 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரிவர்த்தனையின் அளவு 29.4 பில்லியன் டாலராக இருந்தது.
கடந்த 2007ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியர்கள் செய்திருந்த முதலீடுகளின் அளவு 2.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அந்த நாட்டின் நேரடி அன்னிய முதலீடுகளில் 7 சதவீதமாகும்.
அதேபோல கடந்த ஆண்டு இந்தியாவில் எமிரேட்ஸ் நிறுவனங்கள் செய்திருந்த முதலீடுகளின் அளவு 1.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அடுத்த ஆண்டு 1.9 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால், இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ள ஒரே அரபு நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பதுதான்.
-
ஒரு சின்ன ரூம் ரூ.5.7 கோடி. புர்ஜ் கலீபாவில் சினிமா பிரபலங்கள் வீடு வாங்கி குவிப்பது ஏன் தெரியுமா -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications