ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: 3 மாதத்தில் விசாரணையை முடிப்போம் சிபிஐ
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கை 3மாதங்களில் முடிப்போம் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இதைத் தெரிவித்தார்.
இதுகுறித்து வேணுகோபால் நீதிபதிகளிடம் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடித்து விடுவோம். இந்த கால கட்டத்திற்குள்ளேயே குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விடுவோம்.
விசாரணைக்கு 2 மாத காலமாகும். அடுத்த ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு விடும்.
ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்கள், சாட்சியங்கள் தேவை. அதை சேகரிக்க முயன்று வருகிறோம். சிஏஜி அறிக்கை என்பதை ஆதாரமாக கருத முடியாது. அது ஒரு நிதி நிர்வாகம் தொடர்பான அறிக்கை மட்டுமே. நிதி நிர்வாகம் சரியாக கையாளப்படவில்லை என்று மட்டுமே சிஏஜி கூறியுள்ளது. மாறாக குற்றம் நடந்துள்ளதாக அது கூறவில்லை.
எனவே விசாரணை முழுமையாக நடந்து முடிந்த பின்னரே நாங்கள் செய்த விசாரணை சரியான முறையில் நடந்ததா, இல்லையா என்பதை கூற முடியும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications