மதுராந்தகம் அருகே அரசு பஸ் டயர் கழன்று ஓடியது: 30 பயணிகள் தப்பினர்!
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே இன்று காலை அரசுப் பேருந்தில் இருந்து ஒரு டயர் தானாகக் கழன்று ஓடியது. இருப்பினும் பேருந்தில் இருந்த 30 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு இரும்பேடு கிராமம் நோக்கி 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது.
மதுராந்தகம் ரயில்வே கேட் அருகே சென்று கொணடிருக்கையில் பேருந்தின் முன் பக்க டயர் ஒன்று தானாகக் கழன்று சாலையில் ஓடியது. இதையடுத்து பேருந்து நிலைகுலைந்து ஒரு பக்கம் குடை சாய்ந்து கொண்டே ஓடியது. இதைப் பார்த்த பயணிகள் பயத்தில் கூச்சல் போட்டனர்.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் வெகு சாமர்த்தியமாக செயல்பட்டு, கஷ்டப்பட்டு பேருந்தை நிறுத்தினார். இதனால் பயணிகள் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினர். நடுரோட்டில் நின்ற இந்த பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து பொது மக்கள் கூறியதாவது,
ஒழுங்கான சாலை இல்லாததால் தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இத்துடன் மழை பெய்து சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications