ஸ்பெக்ட்ரம் விவகாரம்-11வது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் அமளி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை கோரி இன்று 11வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி இரு அவைகளிலும் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் கடந்த 10 நாட்களாக இரு அவைகளிலும் ஒரு அலுவலும் நடைபெற முடியவில்லை. இன்று 11வது நாளாக இரு அவைகளிலும் அமளி தொடர்ந்தது.
இன்று காலை இரு அவைகளும் கூடியபோது அமளியில் எதிர்க்கட்சிகள் குதித்ததால் சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.
12 மணிக்கு இரு சபைகளும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்தனர். அதேபோல ராஜ்யசபாவிலும் அவைத் தலைவர் இருக்கை முன்பு கூடி எதிர்க்கட்சியினர் அமளியில்ஈடுபட்டனர்.
இதையடுத்து இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications