கடந்த தேர்தலை விட 21 இடங்கள் கூடுதலாக பெற்ற பாஜக!
பாட்னா: கடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை கூடுதலாக 21 இடங்களைப் பெறுகிறது பாஜக. அதேசமயம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கடந்ததேர்தலை விட 12 இடங்களே அதிகம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005ல் நடந்த பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணிக்கு மொத்தம் 143 இடங்கள் கிடைத்தன. இதில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 88 இடங்களும், பாஜகவுக்கு 55 இடங்களும் கிடைத்தன.
தற்போதைய முன்னணி நிலவரப்படி ஐக்கிய ஜனதாதளம் 100 தொகுதிகளிலும் பாஜக 76 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. அதன்படி இந்த முறை ஐக்கிய ஜனதாதளத்திற்கு 12 தொகுதிகளும், பாஜகவுக்கு 21 தொகுதிகளும் கூடுதலாக கிடைக்கின்றன.
கடந்த முறை லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ், சிபிஎம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஒரே கூட்டணியாக போட்டியிட்டு 65 இடங்களைக் கைப்பற்றினர். இந்த முறை இவர்கள் பிரிந்து நின்றனர்.
கடந்த முறை லாலு கட்சிக்கு 54 சீட்கள் கிடைத்தன. ஆனால் இந்த முறை அது 33 சீட்களே கிடைக்கும். காங்கிரஸ் கட்சி கடந்த முறை 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை 4 தொகுதிகளில் மட்டுமே அது வெல்கிறது.
இந்த தேர்தல் வெற்றிக்கு நிதீஷ்குமார்தான் காரணம் என்றாலும் அதனுடன் இணைந்து கூடுதல் பலன் பெற்றுள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications