வெள்ளத்தில் மிதக்கும் மதுரை திருமங்கலம்: விடுதியில் சிக்கிய 68 மாணவிகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 68 மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மதுரையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதையடுத்து வைகை அணை நிறம்பியது. மேலும், மதுரையில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் உள்ள ஓடை உடைப்பெடுத்தது. இதனால் மம்சாபுரம் பகுதியில் வெள்ள்ம் புகுந்து வெள்ளக்காடாக ஆனது. வெள்ளப்பெருக்கால் அங்குள்ள வீடுகள் நீரில் மூழ்கியதால் மக்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மம்சாபுரத்தில் உள்ள பள்ளி வெள்ளத்தில் மூழ்கியதால் இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் வெள்ள நீர் புகுந்தது. இதில் விடுதிக்குள் சிக்கிய 68 மாணவிகளை இன்று காலை பத்திரமாக மீட்டனர்.












Click it and Unblock the Notifications