நிதிஷ் குமார் கூட்டணிக்கு 4ல் 3 பங்கு மெஜாரிட்டி கிடைத்தது
பாட்னா: நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கு பீகார் சட்டசபையில் நான்கில் மூன்று பங்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. அக்கூட்டணிக்கு 206 இடங்களில் வெற்றி கிடைத்தது.
இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 115 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கட்சி 141 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜகவுக்கு 91 இடங்கள் கிடைத்தன. இக்கட்சி மொத்தம் 102 இடங்களில் போட்டியிட்டது. கடந்த 2005 தேர்தலில் 143 இடங்களை மட்டுமே இக்கூட்டணி பெற்றிருந்தது.
லாலு பிரசாத் யாதவ்-ராம் விலாஸ் பாஸ்வான் கூட்டணிக்கு வெறும் 25 இடங்களே கிடைத்துள்ளன. இதில் லாலு கட்சிக்கு 22 இடங்களும், பாஸ்வான் கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன. கடந்த தேர்தலில் இக்கூட்ணி 64 இடங்களை வென்றது நினைவிருக்கலாம்.
காங்கிரஸ் கட்சி வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 9 இடங்களில் வென்றிருந்தது.
சிபிஐ, சிபிஎம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியோர் தலா ஒரு இடங்களில் வென்றனர். மற்றவர்களில் 5 வெற்றி பெற்றனர்.
தேர்தலில் மொத்தம் 25 அமைச்சர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 20 பேர் வெற்றி பெற்றனர். 5 பேர் தோல்வியடைந்தனர். வெற்றி பெற்ற 20 பேரில் 13 பேர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர். மற்றவர்கள் பாஜகவினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications