டெல்லியில் பிபிஓ ஊழியையை கற்பழித்த 4 பேர்: போலீசார் வலைவீச்சு
டெல்லி: 30 வயதுடைய பிபிஓ ஊழியையை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்தக் கும்பலை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
சமீபகத்தில்தான் காரிலேயே வைத்து ஒரு பிபிஓ ஊழியை கற்பழிக்கப்பட்டார். இந்தநிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது டெல்லியை அதிர வைத்துள்ளது.
மணிபூரைச் சேரந்த பெண் ஒருவர் டெல்லியில் உள்ள தௌலா கான் பகுதியில் தங்கி பிபிஓவில் பணியாற்றி வருகிறார். இவர் இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாகத் தங்கியுள்ளார்.
நேற்று பணி முடிந்து அவரும், அவரது தோழியும் நிறுவன வாகனத்தில் வந்து அதிகாலை 1.21 மணி அளவில் தௌலா கான் பகுதியில் இறங்கியுள்ளனர். நானக்புரா குருத்வாரா அருகில் வந்து கொணடிருக்கையில் குடிபோதையில் இருந்த 4 பேர் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஒரு டெம்போ வண்டியில் ஏற்ற முயன்றனர். இதில் உடனிருந்த தோழி தப்பிவிட்டார்.
சிக்கியரை அவர்கள் 4 பேரும் சேர்ந்து சுமார் 40 நிமிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரை மங்கோல்புரி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகில் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே தப்பிச் சென்ற அவரது தோழி இது குறித்து போலீசுக்குத் தகவல் கொடுத்தார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே பாதி மயக்கத்தில் இருந்த அவர் தனது தோழியை செல்போன் மூலம் அழைத்து தன் இருப்பிடத்தைப் பற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின்படி அந்த 4 பேர் கூலித் தொழிலாளர்களாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே, கடந்த 24 மணி நேரத்தில் எந்தெந்தப் பகுதிகளில் சரக்கு இறக்குமதி நடந்திருக்கிறது என்று அவர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications