மழையால் ரூ.40 கோடி ரப்பர் உற்பத்தி பாதிப்பு: 50 ஆயிரம் பேர் வேலை இழப்பு
மார்த்தாண்டம்: குமரியில் பெய்து வரும் கனமழையால் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 62.5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் வரை ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரப்பர் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது.
தற்போது முதல் தர ரப்பர் கிலோ ரூ. 200க்கும், 2-ம் தர ரப்பர் கிலோ ரூ. 183க்கும் விற்கப்படுகிறது. ஒட்டுக்கரை ரப்பர் கிலோ ரூ.130 முதல் 140 வரை விற்கப்படுகிறது.
பெரிய எஸ்டேட்டுகளில் மழை காலங்களில் பால் வடிக்க வசதியாக மரங்களில் சிறிய பிளாஸ்டிக் குடைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை கனமழைக்கு தாக்குபிடிப்பதில்லை. இதனால் தற்போது அங்கும் ரப்பர் பால் வடிப்பது முடங்கியுள்ளது. இதனால் ரூ. 40 கோடி வரை ரப்பர் வர்த்தகம் முடியங்கியுள்ளது. இதையடுத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications