ராகுல் காந்தி மீது ஜெகன் மோகன் டிவி கடும் தாக்கு!: ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியாவைத் தாக்கி செய்தி வெளியிட்டது ஷாக்சி. ஆனால், மக்களிடையே அவருக்கு உள்ள ஆதரவையும், எம்எல்ஏக்களில் அவரது ஆதரவாளர்களையும் மனதில் வைத்து அவர் மீது நடவடிக்கை எடு்க்க முடியாமல் தவிர்த்து வருகிறு காங்கிரஸ் தலைமை.
இந் நிலையில் நேற்றிரவு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை அந்தத் தொலைக்காட்சி கடுமையாக வாரியது. அதன் செய்தி அறிக்கையில், ''125 வருட பாரம்பரியம கொண்ட காங்கிரஸ் கட்சி பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் தோல்வி அடைந்துள்ளது. கட்சியில் மக்களைக் கவரும் தலைவர்கள் யாரும் இல்லை. ராகுலுக்கும் மக்களைக் கவரத் தெரியவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் காங்கிரஸ் மேலிடம் மேலும் கடுப்படைந்துள்ளது.
இந் நிலையில் இன்று திடீரென ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் அவரது ஆதரவு எம்பிக்களும் எம்எல்ஏக்களும் முன்னாள் அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் கூட்டத்தால் காங்கிரஸ் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி கட்சியை உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications