தூத்துக்குடி திமுக நிர்வாகிகளுடன் கருணாநிதி கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி இன்று கலந்துரையாடலை நடத்தினார்.
மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி திமுக நிர்வாகிகளுடன் மாவட்ட வாரியாக முதல்வர் கருணாநிதி கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இன்று காலை 9.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் துவங்கியது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார்.
நிதி அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான க. அன்பழகன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீரசாமி, துரை முருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், மத்திய அமைச்சர் முக அழகிரி, அமைப்பு செயலாளர்கள் டி.கே.என். இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications