ஆதர்ஷ் வீட்டு ஊழல் ஆவணங்கள் மாயம்!!- சிபிஐ விசாரணை

மும்பையில் கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு 31 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டி தரப்பட்டது. இதற்கு ஆதர்ஷ் குடியிருப்பு எனப் பெயரிடப்பட்டது.
இந்த குடியிருப்பைக் கட்டுவதில் பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முதல்வர் அசோக் சவான் மற்றும் துணை முதல்வர் மாற்றப்பட்டனர்.
மேலும் ஊழல் வழக்கில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணமான கோப்பில் 15,27,99,279 ஆகிய முக்கிய பக்கங்கள் காணவில்லை.
சி.பி,ஐ, விசாரித்து வரும் இந்த வழக்கில், நகர்புற மேம்பாட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த ஆவணங்களில்தான், ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் எழுதிய குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இப்போது அவை மாயமாகியிருப்பதால், அந்த நேரத்தில் முதல்வராக இருந்த அசோக் சவானை குறை கூற போதிய ஆதாரங்கள் இல்லாத நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications