ஒரு வழியாய் விடிவு பிறக்கிறது: திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையே இருவழி சாலை!

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று உள்கட்டமைப்புகளுக்கான அமைச்சரவைக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அதில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டம் ரூ.610.21 கோடி செலவில் நிறைவேற்றப்படும். திட்டத்தை வடிவமைத்து, கட்டி, இயக்கி ஒப்படைத்தல் (Design, build, finance, operate and transfer-DBFOT) என்ற அடிப்படையில் நிறைவேற்றப்படும்.
இந்தப் பணிகள் இரு ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்தச் சாலை விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளது.
இப்போது இந்தச் சாலை மகா மட்டமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை இடையிலான சாலை தான் மகா மகா மட்டமான நிலை. மாபெரும் பள்ளங்களும், குண்டும் குழிகளுமான இந்த 120 கி.மீ. தூரத்தைக் கடக்க 4 மணி நேரம் வரை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்குச் செல்வோர் படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்தச் சாலையை சீர் செய்ய டி.ஆர்.பாலு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோதே நடவடிக்கை ஆரம்பமானது. இப்போது இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது.
மேலும் நாடு முழுவதும் நக்சலைட்கள் நடமாட்டம் நிறைந்த 60 மாவட்டங்களில் அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.3,300 கோடி செலவிலான சிறப்பு திட்டத்தை நிறைவேற்ற பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையி்ல்,
போதிய சாலை வசதி இல்லாதது தான் நக்சலைட்டுகளை ஒடுக்க பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த நாட்டின் 60 மாவட்டங்களில் இணைப்பு சாலைகள் போடப்படும்.
மேலும இப் பகுதிகளில் கல்வி, குடிநீர், சுகாதாரம், துப்புரவு வசதி உள்ளிட்ட வசதிகளும் நிறைவேற்றப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டில் ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்று முடிவு செய்ய, மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் எஸ்பி, மாவட்ட வன அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும்.
இதுதொடர்பாக 60 மாவட்ட கலெக்டர்களையும் அழைத்துப் பேச திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications