தென் கொரியாவுன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி-ஏவுகணைகளை நிறுத்தும் வட கொரியா

தென் கொரிய தீவு மீத வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியி்ல் இறங்கியுள்ளன.
இதையடுத்து மஞ்சள் கடல் பகுதியில் தனது நிலம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளது வட கொரியா.
இந்த நிலையில் பிரச்சினையைத் தணித்து அமைதியை நிலை நாட்ட முயற்சிக்கப் போவதாக சீனா கூறியுள்ளது.
இதுதொடர்பாகதென் கொரிய அதிபர் லீ மியூங் பாக்கை சீனக் குழு சந்தித்துப் பேசியது.
கொரிய பிரச்சினையில் இதுவரை சீனா நேரடியாக தலையிட்டதில்லை. அதேசமயம், வட கொரியாவின் அத்துமீறல்களை அது கண்டித்ததும் இல்லை. ரஷ்யாவைப் போல வட கொரியாவின் பக்கமே சீனாவும் நிற்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதை சீனா எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் தற்போதையநெருக்கடியான நிலையில், வட கொரியாவுக்கு சீனா அறிவுரை கூறி அடக்கி வைக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் இறங்கியுள்ளதால் போர் மூளும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications