நாடாளுமன்ற அமளியை நிறுத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விடக் கோரி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்றே அக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஊரில் இல்லாததால் நாளைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜேபிசி விசாரணை தேவையில்லை-காங். கூட்டணிக் கட்சிகள்:
இதற்கிடையே, டெல்லியில் இன்று நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கூட்டணிக் கட்சிகள் கூடி நடத்திய கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஜேபிசி விசாரணைக்கு விட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஆதரவு தருவதாகவும் கூட்டணிக் கட்சிகள் உறுதிபடத் தெரிவித்தன.
மதிய விருந்துடன் நடந்த இந்த சந்திப்பில் திமுக, தேசியவாத காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், தேசியமாநாட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இது நடந்தது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதில் பங்கேற்றார். பின்னர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், ஜேபிசி விசாரணை கோரிக்கையை கைவிட்டு விட்டு நாடாளுமன்றம் செயல்பட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும்.
இதுதொடர்பாக நான் நேற்றே கோரிக்கை வைத்தேன். ஆனால் அதை பாஜக உள்ளிட்டவை நிராகரித்துள்ளன. தற்போது அந்தக் கோரிக்கையை மீண்டும் வைக்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications