ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

டோக்யோ: இன்று ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.

இன்று பகல் 12.25 மணிக்கு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. எனினும், இது வரை உயிர் இழப்போ, சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வரவில்லை. மேலும், சுனாமி வரும் அபாயமும் இல்லை. இது கடலுக்கு அடியில் சுமார் 480 கிமீ ஆலத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஆகஸ்வாரா தீவுகளை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க புவியியல் மையம் நிலநடுக்கம் 6..6 ஆக இருந்தது என்கிறது. இந்த குழப்பத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

ஜப்பானுக்கு வெளியே இருக்கும் போனின் தீவுகள் தான் ஆகஸ்வாரா தீவுகள் ஆகும்.

ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கடந்த 1995-ம் ஆண்டு 7.2 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தெற்கு நகரமான கோபில் 6, 400 பேர் உயிர் இழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+