நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்
சென்னை: நாகப்பட்டினம் - வாஸ்கோடகாமா இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறி்த்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
வாஸ்கோடகாமா - நாகப்பட்டினம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவிருக்கிறது. இது மங்களூர், ஈரோடு, திருச்சி வழியாகச் செல்லும். அடுத்த மாதம் 6-ம் (6-12-2010) தேதியில் இருந்து வரும் ஜனவரி மாதம் 17-ம் தேதி் வரை (17-1-2011) இயக்கப்படும் சிறப்பு ரயில் (0675) ஒவ்வொரு திங்கள்கிழமையும் இரவு 7.10 மணிக்கு வாஸ்கோடகாமாவில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 7.15 மணிக்கு நாகப்பட்டினம் வந்தடையும்.
மறுமார்க்கமாக அடுத்த மாதம் 7-ம் தேதி (7-12-2010) முதல் ஜனவரி மாதம் 18-ம் தேதி (18-1-2011) வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (0676) செவ்வாய்கிழமைதோறும் இரவு 10.30 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
இதேபோன்று பாட்னா-பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது. (30-11-2010) இன்று முதல் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் (7-12-2010) சிறப்பு ரயில் (வ.எண் 2296 ஏ) ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் இரவு 7.55 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 8.40 மணிக்கு பெங்களூர் வந்தடையும்.
பெங்களூரில் இருந்து 3-12-2010 மற்றும் 10-12-2010 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (2295 ஏ) ஞாயிற்றுக்கிழமை காலை 9.20 மணிக்கு பாட்னாவை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று அதில் கூறப்பட்டிருந்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications