புதுச்சேரி மாஜி முதல்வர் ரங்கசாமி தனிக் கட்சி தொடங்கத் திட்டம்
Subscribe to Oneindia Tamil

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் 2 முறை முதல்வராக இருந்தவர். இவரது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் கண்டு பொறுமிய காங்கிரஸ் கோஷ்டியினர் அவருக்கு எதிராக புயலைக் கிளப்பி, பதவியிலிருந்து நீக்கி விட்டனர். இதையடுத்து வைத்திலிங்கம் முதல்வரானார்.
இதன் பின்னர் ரங்கசாமியம், அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு முடக்கப்பட்டு விட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் பொங்கி எழ முடிவு செய்துள்ளார் ரங்கசாமி. காமராஜ் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.
அவருக்கு வைத்திலிங்கம் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களும், கணிசமான அளவிலான எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதுவை காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications