ராஜபக்சேவின் ஆக்ஸ்போர்ட் வருகையின்போது மாபெரும் போராட்டம்-லண்டனில் குவியும் தமிழர்கள்

லண்டன் போய்ச் சேர்ந்த ராஜபக்சேவுக்கு தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பெரும் 'வரவேற்பு' அளித்து அவரை அதிர வைத்தனர். இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக நாளை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ராஜபக்சேவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்த தமிழர்கள் திரண்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு அனுமதிகோரி போலீஸ் தரப்பிடம் போராட்ட அமைப்பாளர்கள் மனு அளித்தனர். அதை போலீஸார் ஏற்று அனுமதியும் கொடுத்து விட்டனர். இதனால் லண்டன் வாழ் தமிழர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையடுத்து போராட்டத்திற்கான ஏற்பாடுகளை படு வேகமாக முடுக்கி விட்டுள்ளனர் தமிழர்கள். லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் மின்னல் வேகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஏராளமான வேன்களில் ராஜபக்சேவுக்கு எதிரான பிரசாரம் குறித்த பேனர்களையும் கட்டிக் கொண்டு லண்டனை வலம் வருகின்றனர் தமிழர்கள். மிகப் பெரிய அளவில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் ஒரு தமிழர் கூட விட்டுப் போய் விடக் கூடாது என்ற நோக்கத்துடன் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழர்களோடு சேர்ந்து இலங்கை முஸ்லீம்கள் மற்றும் சிங்களர்களும் கூட சேர்ந்து கொள்ளவுள்ளனராம். பொன்சேகா கைதால் அதிருப்தியில் உள்ள சிங்களர்களும் ராஜபக்சே லண்டன் வந்தபோது போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல ஆயிரம் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் லண்டனே பரபரப்பாகியுள்ளது. போராட்டத்திற்காக வரும் தமிழர்கள் எந்த வழியாக வர வேண்டும், வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும் போராட்டக் குழு தமிழர்களுக்குத் தெரிவித்துள்ளது. இது போக போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தமிழர்களை அழைத்து வர பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications