உணவுப் பணவீக்கம்: புள்ளி விவரத்துக்கும் நடைமுறைக்கும் ஏக முரண்பாடு!!
உணவுப் பணவீக்கம் தொடர்ந்து 7 வது வாரமாகக் குறைந்துள்ளது. நவம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.6 சதவீதமாக இருந்தது உணவுப் பணவீக்கம். இதற்கு முந்தைய வாரத்தில் 10.15 சதவீதமாக இருந்தது.
கரீப் பருவ விளைச்சல் சந்தைக்கு வரத்துவங்கியுள்ளதால் இந்த விலைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் உணவு தானியங்களின் விலை 10 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், காய்கறிகள் மிகவும் மலிவாகிவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் முரண்பாடு...
ஆனால் உண்மையில் கடந்த மூன்று வாரங்களாக காய்கறிகளின் விலை உயர்வு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெங்காயம் விலை 50 ரூபாய்க்கும் அதிகமாகவும், பூண்டு ரூ 220 வரையிலும், இதர காய்கறிகள் இரண்டு மடங்கு அதிக விலையிலும் விற்கப்பட்டு வருகிறது.
ஆனால் உணவுப் பணவீக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பொதுப் பணவீக்க கணக்கெடுப்பு முறை சரியான நிலவரத்தைக் காட்டுவதில்லை என்பதற்காகவே இந்த உணவுப் பணவீக்க முறை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதிலும் நடைமுறைக்கும் புள்ளிவிவரத்துக்கும் சம்பந்தமே இல்லாத நிலை தொடர்கிறது.
உண்மையில் இந்த இரண்டாம் காலாண்டில் ஒரு முறை கூட உணவுப் பொருள்களின் விலை இறங்கவே இல்லை என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications