'ராஜபக்சே-சகோதரர்கள் போர் குற்றவாளிகள்': அமெரிக்கா கருத்து, விக்கீலீக்ஸ் தகவல்

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பாட்ரிஷியா வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு ஜனவரி மாதம் அனுப்பிய ரகசிய கேபிள் தகவலில் கூறியிருப்பதாவது:
ஒரு அரசு தனது அதிகாரிகளும், படைகளும் தங்கள் பதவிக் காலத்தில் செய்த போர்க் குற்றங்களை தானாக விசாரித்ததாக நாம் கேள்விப்பட்டதே இல்லை.
ஆனால், இலங்கைப் பிரச்சனையில் உள்ள சிக்கல் என்னவென்றால் குற்றங்களை செய்தவர்கள் நாட்டின் உயர் அதிகாரிகளாகவும், ராணுவத் தளபதிகளாகவும் இருக்கிறார்கள். இதில் ராஜபக்சே மற்றும் சகோதரர்களுக்கும், எதிர்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கும் பங்குள்ளது.
ராஜபக்சே அரசை எதிர்ப்பவர்கள் திடீர் என்று மாயமாகிவிடுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர்.
உலகளவில் தமிழர்கள் இந்த பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் இலங்கையில் இருக்கும் தமிழர்களோ அரசை கடுமையாக எதிர்ப்பதற்கு இது நேரமில்லை என்றும் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த தககவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சே தான் பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருக்கிறார். பொன்சேகா விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவத்திற்கு தலைமை வகித்தார். அவர் அதிபர் தேர்தலில் தோற்றபிறகு கைது செய்யப்பட்டார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications