திண்டுக்கல் ஹோட்டலில் வைத்து அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை
திண்டுக்கல்: கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சேரன்மாதேவி அதிமுக கிளைச் செயலாளர் திண்டுக்கல் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார்.
அவருடன் இருந்த தேமுதிக பிரமுகர் ஒருவருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
சேரன்மாதேவி அதிமுக கிளைச் செயலாளராக இருந்தவர் குமார் (45). நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மூலச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இவரது நண்பர் தேமுதிக பிரமுகரான பன்னீர்செல்வம்.
இந்த இருவரும் அம்பை பகுதியில் பெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு முன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
இவர்கள் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி இன்று கையெழுத்து போட வந்தனர். திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஒரு ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஹோட்டலுக்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக அரிவாள்களால் வெட்டிச் சாய்த்து. அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் உணவில் ரத்தம் தெறித்தது. இதைப் பார்த்து மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
குமாரும் பன்னீரும் தப்பியோட முயல, அவர்களை ஹோட்டலுக்குள்ளேயே சுற்றி வந்து அந்தக் கும்பல் பலமுறை வெட்டியது. இதில் குமார் அன்த இடத்திலேயே இறந்தார். பன்னீரி் கை, கால்களில் சரமாரி வெட்டு விழுந்தது. அவர் ரத்தம் சொட்ட, சொட்ட ஹோட்டலில் இருந்து வெளியே ஓடிவந்து எதிரே இருந்த போலீஸ் நிலையத்தில் புகுந்துவிட்டார்.
இதையடுத்து அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி கொலையாளிகளில் ஒருவரான கொம்பையன் என்பவனை கைது செய்தனர்.
அவனிடம் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே கொலையான பெருமாளின் தம்பி கந்தன் தலைமையில் வந்த 4 பேர்தான் இன்று குமாரையும் பன்னீரையும் வெட்டி கொலை செய்தது என்று தெரியவந்துள்ளது. கந்தன் உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகி்ன்றனர்.


Click it and Unblock the Notifications
