1 லட்சம் பணியாளர்கள்... 1 லட்சம் மரங்கள்: காக்னிஸன்டின் பசுமைத் திட்டம்!

தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வர்த்தகத் தீர்வுகளுக்கான வெளிப்பணிகள் செய்வதில் முன்னணி நிறுவனமாகத் திகழும் காக்னிஸன்ட் உலகம் முழுக்க கிளைகளுடன் செயல்படுகிறது. வட அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பல நாடுகளில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது காக்னிஸன்ட்.
இந்த நிறுவனம் சமீபத்தில் 1 லட்சம் பணியாளர்கள் கொண்ட நிறுவனமானது. இதன் 1 லட்சமாவது பணியாளர் அமெரிக்காவில் நிதிப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.
1 லட்சம் பணியாளர் எண்ணிக்கையைக் கடந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், உலகம் முழுக்க 1 லட்சம் மரங்களை (பணியாளருக்கு ஒன்று வீதம்) நட திட்டமிட்டுள்ளது காக்னிஸன்ட். பசுமையான சுற்றுச் சூழலைப் பராமரிக்கும் முயற்சியாக இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
காக்னிஸன்ட் தலைவர் மற்றும் சிஇஓ பிரான்ஸிஸ்கோ டிசோஸா இதுகுறித்துக் கூறுகையில், "வெறும் 175 பணியாளர்களுடன் காக்னிஸன்டை துவக்கினோம். 16 ஆண்டுகளில் 1 லட்சத்தைத் தாண்டியுள்ளோம். வாடிக்கையாளர் திருப்திதான் இந்த அளவுக்கு எங்களைக் கொண்டு வந்துள்ளது.." என்றார்.












Click it and Unblock the Notifications