வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: மீண்டும் பலத்த மழை பெய்யும்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
தொடர்மழையால் இந்த 5 மாவட்டங்களிலும் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் வெள்ளம்:
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது.
தமிழகத்தில் இந்த மழை வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும்.
இப்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடகிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்பட்டுள்ள 8வது காற்றழுத்த தாழ்வு நிலையாகும்.
கடந்த ஆண்டை விட 21 சதவீதம் அதிக மழை:
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டை விட 21 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. ஆனால் சென்னை நகரில் மட்டும் கடந்த ஆண்டை விட 28 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி ஆய்வு:
இந் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றிற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யவும், நிவாரண உதவிகளை தாமதமில்லாமல் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications