லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆகுமா?-பேச்சுவார்த்தை தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

Lorry Strike
நாமக்கல்: சுங்கவரி பிரச்சினைக்கு தீர்வு காண வருகிற 5ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்போதே ஸ்ட்ரைக் துவங்கிவிட்டது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் லாரி அதிபர்களுடன் மத்திய அரசு அதிகாரி இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதில் உடன்பாடு ஏற்பட்டால் லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆகும் என்று தெரிகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஒரே மாதிரியான சுங்கவரி வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தடுக்கும் வகையில் மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் 2 முறை லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது எந்தவித சுமூக தீர்வும் ஏற்படவில்லை.

சரக்கு புக்கிங் நிறுத்தம்!

எனவே லாரி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தை வலுபடுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலமாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கத்தினர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக சரக்கு புக்கிங்கை நிறுத்தி விட்டனர்.

இதனால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் 40 ஆயிரம் லாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே நிறுத்தப்பட்டு விட்டன. எனவே வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும் சரக்குகள் தேங்க தொடங்கி உள்ளன. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சகம், இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் உடன்பாடு ஏற்பட்டால் லாரி ஸ்ட்ரைக் வாபஸ் ஆகும்.

தூத்துக்குடியில் 8,000 லாரிகள் ஓடாது:

இதற்கிடையே லாரிகள் வேலை நிறுத்தம் நடந்தால் தூத்துக்குடியில் 8,000க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாது என்று அம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சாமுவேல், லாரி புக்கிங் ஏஜென்சிகள் தலைவர் சுப்புராஜ் ஆகியோர் கூறினர்.

அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் லாரிகளில் டீசல் செலவை விட சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளது. முக்கிய சுங்கச் சாவடிகளில் எடை மேடை அமைத்து கூடுதல் பாரம் ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும். நகர எல்லையில் இருந்து 27 கிலோ மீ்ட்டர் தொலைவிற்கு சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது என விதிமுறை உள்ளது. அவ்வாறு விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 5ம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் துவங்குகிறது. அதில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 8,000 சரக்கு லாரிகள் கலந்து கொள்ளும். இதனால் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+