வரும் தேர்தலிலும் அதிமுகவுடன் தான் கூட்டணி-டாக்டர் சேதுராமன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவுடனேயே கூட்டணி தொடரும் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
இந்த கட்சியின் 35வது மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றம் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எங்கள் கட்சி சார்பில் வரும் 16-ந் தேதி தமிழகத்தில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். வரும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. உடனான கூட்டணி தொடரும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications