டிச. 7ல் கருணாநிதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: மழை நிலவரம் குறித்து ஆய்வு
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்கிறது. இதில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதுவரை மழைக்கு 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் குழுவை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரவையின் அவசரக் கூட்டம் வரும் 7-ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. இதில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.
இதேபோல மழை சேதம் குறித்து ஆராய அதிகாரிகள் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதன்மை செயலாளர்கள் வி. கே. சுப்புராஜ் (சுகாதாரம்), பி. டபுள்யூ. சி. டேவிதார் (மின்சாரம்) உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழு மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களை வரும் 5, 6 ஆகிய தேதிகளில் பார்வையிடுகின்றனர்.
அவர்கள் பயிர்கள், சாலைகள், மற்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்கின்றனர். மேலும், அம்மாவட்டங்களில் நடந்து வரும் நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிடுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications