தொடர் மழையால் ஏரல் அருகே போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி
ஏரல்: ஏரல் அருகே மழை வெள்ளத்தில் சாலைகள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏரல் பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக அங்குள்ள வயல்கள் தண்ணீரில் மூழ்கி வாழை, கொடிக்கால் உள்ளிட்ட பயிர்கள் சேதமாகிவிட்டன. மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் பல வீடுகள் இடிந்துள்ளன.
ஏரல் ஆற்று பாலத்தில் நேற்று முன்தினம் தண்ணீ்ர் பாலத்தை தொட்டுக் கொண்டு சென்றது. எந்த நேரத்தில் பாலம் மூழ்குமோ வெள்ளம் ஊருக்குள் வருமோ என்ற பயத்தில் மக்கள் இருந்தனர். ஆனால் மழை அளவு குறைந்ததால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் பாலம் மூழ்காமல் தப்பியது.
கன மழையால் வெள்ள நீர் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காரவிளை கிராம தரைப்பாலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் சென்றதால் நேற்று மதியத்தில் இருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஏரலில் இருந்து குரும்பூர் வழியாக செல்லும் பேருந்துகள் குரங்கனி, தெந்திருப்பேரை வழியாகவும், சில பேருந்துகள் ஆத்தூர் வழியாகவும் செல்கின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications