பிப். 12-26-ல் ஜார்கண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல்வர் அறிவிப்பு
ஜம்ஷெத்பூர்: 34-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 12 முதல் 26-ம் தேதி வரை ஜார்கண்டில் நடக்கும் என்று அம்மாநில முதல்வர் அர்ஜுன் முன்டா நேற்று தெரிவித்தார்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 7 தடவை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜார்கண்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஜார்கண்ட் முதல்வர் அர்ஜுன் முன்டா கூறியதாவது,
நேற்று ராஞ்சியில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராஞ்சியில் உள்ள விளையாட்டு காம்ப்ளக்ஸ்-க்கு என் முந்தைய ஆட்சிக் காலத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு ஜார்கண்டில் நடைபெற வேண்டிய தேசிய விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது முடிவு செய்யப்பட்ட தேதிகளில் போட்டிகள் நிச்சயமாக நடக்கும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.
இப்போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும்படி இது தொடர்பான அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications