ராஜபக்சேவுக்கு எதிராக பிரிட்டன் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்ததாக பரபரப்பு

அசுரன், ராட்சசன், கொடூரன், மிருகம் என்று என்ன விதமான கொடூரமான வார்த்தைகள் உள்ளதோ அதையெல்லாம் மிஞ்சும் வகையி்ல் போய் விட்டது ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் கூட்டம் போட்ட கொலை வெறியாட்டம்.
ராஜபக்சே சகோதரர்கள் மட்டுமல்லாமல் சரத் பொன்சேகாவும் ஒரு மிகப் பெரிய போர்க் குற்றவாளி என்பதை அனைவருக்கும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது சமீபத்தில் வெளியான கொடூரப் படுகொலை குரித்த வீடியோ காட்சிகள்.
ராஜபக்சே லண்டனுக்குப் போயிருந்த சமயம் பார்த்து இந்த கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரு ஓட்டத்தை வாழ்க்கையில் ராஜபக்சே ஓடியிருக்க மாட்டார், இப்படி ஒரு பீதியை அவர் தனது வாழ்க்கையில் சந்தித்திருக்க மாட்டார் என்று கூறும் அளவுக்கு லண்டனுக்குப் போன அவர் உயிரைக் கையில் பிடித்தபடி பிரிட்டிஷ் அரசிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி, உயிர் தப்பி இலங்கைக்கு ஓடி வந்து சேர்ந்துள்ளார். உயிர்ப் பயம் என்றால் என்ன என்பதை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் ராஜபக்சேவுக்குக் காட்டி விட்டனர்.
இப்போது ராஜபக்சேவுக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அவருக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட் ஒன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையின் சிங்கள இதழான திவயின இதுதொடர்பான செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.
மத்திய லண்டனில் உள்ள ஹார்ஸ்பெர்ரி ரோடு மாஜிஸ்திரேட் கோர்ட் இந்த கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
போர்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் ராஜபக்சே உள்ளிட்டோரைக் கைது செய்யக் கோரி இந்தக் கோர்ட்டில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 2ம் தேதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தற்போது ராஜபக்சே இங்கிலாந்து தப்பி ஓடி இலங்கைக்கு வந்து விட்டார்.
இங்கிலாந்து கோர்ட் ஒன்று, இன்னொரு நாட்டின் அதிபரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருப்பது இதுவேமுதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த செய்தி சரியாக இருந்தால், இனிமேல் ராஜபக்சேவால் இங்கிலாந்து பக்கமே போக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications