'ஆந்திராவில் விழுந்த ஓட்டு சோனியாவுக்கோ ராகுலுக்கோ அல்ல!' - காங் எம்எல்ஏ
ஹைதராபாத்: ஆந்திர மாநில காங்கிரஸிலிருந்து ஒவொவரு நிர்வாகியாக விலக ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் ஜெகனின் ஆதரவாளர்களாக மாறி காங்கிரஸுக்கு எதிராக பேட்டியளித்து வருகின்றனர்.
ஆந்திராவின் சம்பலமருகு தொகுதி எம்எல்ஏ, ஆதிநாராயண ரெட்டி பகிரங்கமாக காங்கிரஸிலிருந்து வெளியேறி ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்துள்ளார். ஏற்கெனவே 12 எம்எல்ஏக்களை அணி சேர்த்துள்ள ஜெகனுடன் கை கோர்க்கும் 13வது எம் எல் ஏ இவர்.
இதுகுறித்து, ஆதி நாராயணா கூறுகையில், "கடந்த தேர்தலில் நான் ராஜசேகர ரெட்டியால்தான் வெற்றி பெற்றேன். எனக்காக அவரும், அவரது மகன் ஜெகன்மோகனும் தீவிர பிரசாரம் செய்தனர். அவர்களது பிரசாரத்தால்தான் நான் வெற்றி பெற்றேன். சோனியாகாந்தி, ராகுல்காந்திக்காக மக்கள் ஓட்டுப்போட வில்லை. அவர்களை மட்டும் முன் நிறுத்தியிருந்தால் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியிருக்கும்.
ஒருவேளை நான் காங்கிரசில் இருந்திருந்தாலும் ஜெகன்மோகனைத்தான் ஆதரித்திருப்பேன். இப்போது வெளிப்படையாகவே ஆதரிக்கிறேன். இந்த முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. அடுத்த தேர்தலில் ஜெகன் கட்சிதான் அமோக வெற்றி பெறும். அவருக்குதான் மக்கள் ஆதரவு உள்ளது...", என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications