சென்னையில் ஜெகன்மோகன் ஆலோசனை!

ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பதவி தனக்கு வரும் என்று எதிர்ப்பார்த்தார் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி. அவருக்கு கட்சி மட்டத்திலும் நல்ல செல்வாக்கு இருந்தது.
ஆனால் கட்சித் தலைவர் சோனியா காந்தியோ, ரோசய்யாவை முதல்வராக்கி ஜெகனை கண்டுகொள்ளாமல் விட, அவர் அப்போதிலிருந்தே தனிக் கட்சிக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். ஒய் எஸ் ஆர் மறைவின் போது தற்கொலை செய்து கொண்ட தொண்டர்களைச் சந்தித்து ஆறுதல் கூற யாத்திரை தொடங்கினார். ஆனால் அதற்கும் காங்கிரஸ் மேலிடம் தடை போட, கட்சிக் கட்டுப்பாட்டை மீற ஆரம்பித்தார்.
சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் ஆகியோர் மீதான கடும் தாக்குதலையும் தனது டிவி மற்றும் பத்திரிகைகளில் தொடங்கிவிட்டார்.
கட்சி மேலிடம் அவரிடம் விளக்கம் கேட்க, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அவரது தாயார் விஜயலட்சுமி எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டியை 12 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கின்றனர். ஏராளமான காங்கிரஸ் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் ஜெகன்மோகன் பக்கம் தாவி விட்டனர்.
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுகிகு வந்தார். அங்குதான் இப்போதும் தங்கி உள்ளார். அவரது வருகைக்கான காரணத்தை வெளியிட மறுத்து விட்டார்.
காங்கிரசில் இருந்து விலகிய பிறகு அவர் முதன் முறையாக 18-ந் தேதி யாத்திரை தொடங்குகிறார். கடப்பா மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த தொகுதிகளில் தனது தந்தையின் மரண செய்தி கேட்டு உயிரிழந்த 32 குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
மேலும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இருந்தபடி ஆலோசனை நடத்தி வருகிறார். அவரைச் சந்திக்க முக்கியத் தலைவர்கள் இன்று சென்னைக்கு வந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications