For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

45 நாளி்ல் புதிய கட்சி துவங்க ஜெகன் திட்டம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இன்னும் 45 நாட்களில் புதிய கட்சி துவங்கவிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜெகன்மோகன் ரெட்டி அன்மையில் காங்கிரஸில் இருந்து விலகியதோடு, தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் புதிய கட்சி துவங்குகிறார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அல்லது ஒய்எஸ்ஆர் ராஸ்டிரிய காங்கிரஸ் கட்சி என்று தனது புதிய கட்சிக்கு அவர் பெயர் சூட்டவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.

இந்த புதிய கட்சியைத் முன்கூட்டியே துவக்க சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அயராது பாடுபடுவதாகத் தெரிகிறது. வரும் முனிசிபாலிட்டி தேர்தலில் தலித் மக்களுக்கு 50 சதவிகத சீட்கள் தருவதாக ஜெகன் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் இருக்கும் தலித் மக்களை தம் பக்கம் ஈர்க்க விரும்புகிறார்.

இதற்கிடையே புலிவந்தலா சட்டப்போரவை மற்றும் கடப்பா நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வருவதையொட்டி அவர் புலிவந்தலா, வேம்பள்ளி மற்றும் சக்ராயபேட்டா ஆகிய பகுதிகளுக்கு நாளை செல்கிறார். அங்கு தன் ஆதாரவாளர்களை சந்திக்கிறார்.

English summary
Jagamohan Reddy will launch a new party within 45 days. Jagan former MP from Kadappa resigned from the party and his seat recently. The new party will be named YSR Congress party or YSR Rashtriya Congress party. Some senior Congress leaders are keen in launching the party ahead of schedule. In order to attract the dalits from Congress and TDP he has offered them 50% seats in the ensuing local body elections. Keeping in mind both Pulivandala Assembly and Kadappa Parliament constituencies by-elections, he is meeting his supporters tomorrow at Pulivendula, Vempalli and Chakrayapeta.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X