குப்பன், சுப்பனுக்காக ஆரம்பித்த திமுக இன்று டாடா, பிர்லா, அம்பானி கட்சியாகி விட்டது-டி.கே.ரங்கராஜன்
திருநெல்வேலி: குப்பன், சுப்பனுக்காக பேரறிஞர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால் தற்போது அந்த கட்சி டாடா, பிர்லா, அம்பானி கட்சியாக மாறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதுவரை நடந்திருக்கும் ஊழல்களில் 2ஜி தான் இமாலய ஊழல் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து திருநெல்வேலியில் டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாடாளுமன்றம் கடந்த 19 நாட்களாக முடங்கியுள்ளது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது எண்ணம். வருடத்திற்கு குறைந்தது 100 நாட்கள் நடக்க வேண்டும் என்பது எங்களது செயல்திட்டத்தில் ஒன்றாகும்.
கடந்த 60 ஆண்டுகளில் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் இமாலய ஊழல். இதனால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு யாரையோ பாதுகாக்க மிகப் பெரிய ஊழலை மூடி மறைக்க பார்க்கிறது.
எனவே, நாடாளுன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கும் வரை எதிர்க்கட்சிகளின் போராட்டமும் தொடரும்.
தொலை தொடர்புத் துறை ஊழல் நிறைந்த துறையாக மாறிவி்ட்டது. குப்பன், சுப்பனுக்காக பேரறிஞர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார். ஆனால் தற்போது அது டாடா, பிர்லா, அம்பானி கட்சியாக மாறிவிட்டது.
தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத் துறைக்கு உட்பட்ட நிலங்களில் மோசடி நடந்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications