சிலி சிறையில் தீ விபத்து: 81 பேர் பலி, ஆபத்தான நிலையில் 14 பேர்
சாண்டியாகோ: சிலி தலைநகர் சாண்டியாகோவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 81 கைதிகள் பலியாகினர்.
சிலியில் சான்மிகுல் என்ற இடத்தில் சிறை உள்ளது. அது 1,100 பேர் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் அளவுக்கு அதிகமாக 1,960 கைதிகள் அடைக்கப்பட்டிருநதனர். இந்நிலையில் அங்கு நேற்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த கைதிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 81 பேர் தீயில் கருகி உயிர் இழந்தனர். 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தால் சிறைச்சாலை புகை மண்டலமாக காட்சியளித்து. தீ வேகமாக சிறை முழுவதும் பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட கைதிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தான் யாரோ வேண்டுமன்றே சிறைக்கு தீவைத்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் மூச்சு முட்டி இறந்துள்ளனர். அவர்கள் மரணச் செய்தி அவரவர் குடும்பத்தார்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
செய்தி அறிந்த உறவினர்கள் சிறை முன் பெருங்திரளாகக் கூடி அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கல், கண்ணாடி பாட்டில்களை எறிந்தும் ஆர்பாட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தனக்கு மன வேதனை அளிப்பதாக அந்நாட்டு அதிபர் செபஸ்டியன் பினேரா தெரிவித்துள்ளார். அவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications