காங். செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி மீது கட்காரி அவதூறு வழக்கு
மும்பை: மும்பை, ஆதர்ஷ் ஊழலில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி மீது பாஜக தலைவர் நிதின் கட்காரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆதர்ஷ் குடியிருப்பில் பாஜக அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரி தனது கார் ஓட்டுநர் பெயரில் வீடு வாங்கியிருக்கிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி குற்றம் சாட்டினார்.
இதை கட்காரி திட்டவட்டமாக மறுத்தார். மேலும், மனீஷ் திவாரி பொய்யாக கூறிய புகாருக்கு தன்னிடம் உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி கட்காரி இன்று மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனீஷ் திவாரி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மனீஷ் திவாரி இது குறித்து அடுத்த மாதம் 24-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications